பிக்பாஸ் ப்ரோமோ: அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ.?
பிக்பாஸ் ப்ரோமோ: அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ.?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 65வது நாளை கடக்கும் வேளையில் இன்று வந்த ப்ரோ மொவில் "புதிய மனிதா" என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.
அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும் பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் விளையாடி வருகின்றனர் என்பதும் இதில் ரோபோ அணியினரை மனிதத்தன்மைக்கு இழுத்துக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த டாஸ்க்கில் அர்ச்சனாவுக்கு வெறுப்பு ஏற்படும்படி மனிதர்கள் அணியில் உள்ளவர்கள் கூறியதாக தெரிகிறது.
குறிப்பாக அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து நிஷா பாலாஜி, ரியோ பேசியதாகவும், அதனால் அர்ச்சனா டென்ஷன் ஆகி கத்துவது போன்ற காட்சிகள் இன்றைய இரண்டவது புரமோவில் உள்ளது.
அன்பு குரூப்பில் உள்ள ரியோ, நிஷா ஆகியோர்கள் மீதே அர்ச்சனா கோபப்படுவதால் அந்த குரூப் உடையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. டாஸ்க்கில் அடித்து கொள்ளும் அன்பு குரூப், மீண்டும் இரவில் லவ் பெட்டில் இணைந்து கொள்வார்களா அல்லது சண்டை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.