பிக்பாஸ்: பாலாஜியை "தல" என்று பதிவிட்ட சுஜித்ரா - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்.!
பிக்பாஸ்: பாலாஜியை "தல" என்று பதிவிட்ட சுஜித்ரா - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்.!

By : Amritha J
பிக்பாஸ் சீசன்-4ல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றைய நாள் வரை பல சுவாரசியமான நிகழ்வுகளும், சண்டைகளும்,பிரச்சினைகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.இந்நிலையில் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கருதப்படும் போட்டியாளர்களின் பட்டியலில் பாலாஜியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஒவ்வொரு வாரமும் தான் செய்யும் தவறுகளுக்கு கமல்ஹாசனிடம் விமர்சனம் பெற்றாலும் அவருடைய ஆட்டம் மற்றும் ஸ்டேட்டர்ஜிக்கள் வித்தியாசமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஆரி மட்டுமின்றி அர்ச்சனா குரூப்புக்கு இருந்து வரும் பாலாஜிக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. இந்த நிலையில் இன்று பாலாஜிக்கு பிறந்தநாள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பாலாஜி உடன் நெருக்கமாக இருந்த சுஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "ஹாப்பி பர்த்டே தல உங்களுடைய இனிமையான கனவுகள் விரைவில் நனவாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுசியின் இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கும் வழக்கம்போல் பல்வேறு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பாக ‘தல’ என்ற பட்டத்தை தோனிக்கு கொடுத்ததற்கே விமர்சனம் செய்யும் அஜித் ரசிகர்கள், பாலாஜிக்கு கொடுத்ததை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
