பிக்பாஸ் : நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவிட்ட சுரேஷ்.!
பிக்பாஸ் : நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவிட்ட சுரேஷ்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ். ரேக்காவை அடுத்து இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். ஆனால் கடைசிவரை சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் வெளியேற்றப்பட்டது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எனினும் பிக்பாஸ் வீட்டில் சாப்பிடவும், தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத ஒருசில போட்டியாளர்கள் இன்னும் இருக்கும் மத்தியில் கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் வெளியேறியது நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்ததாக பலர் கருத்து கூறிவந்தனர்.
இவர் வீட்டை விட்டு வெளியேறினாலும் பிக்பாஸ் போட்டியாளர்களை பற்றி ஒரு சில குறிப்புகள் வெளியில் தந்து கொண்டுதான் இருக்கின்றார். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார்.
இதனைப் புரிந்துகொண்டு நிஷா விளையாடுவாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் என பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு சுரேஷ் அவரது சமூக வலைத்தளங்களில் நிஷா குறித்து சுரேஷ் ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் "நிஷா" 'வேஷம்' என்று கூறியுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் நிஷாவை உண்மையாக புரிந்து வைத்திருக்கிறார் எனவும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.