பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 82வது நாட்களை கடந்து கொண்டிருக்கும் வகையில் பலவிதமான போட்டிகளும் சண்டைகளும் நடைபெற்றுதான் வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போவது யார் என்று சமூக வலைத்தளங்களில் குறைவான வாக்குகள் பெற்ற நபர்களை சுட்டி காட்டி இவர்தான் என்று அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வாரம் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய 5-நபர்கள் எவிக்சன் பட்டியலில் இருக்கும் நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அனிதா, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
திங்கட்கிழமை இந்த வாரம் முதல் நாளே ஆரியின் மீது மிக அதிகமாக அவர் கோபப்பட்டார் என்பதும் தனது கணவர் குறித்து பேசாதே என்று மிகவும் ஆத்திரமாக அவரிடம் கூறியது தான் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது என்றும், அதனால் அவருக்கு இந்த வாரம் மிகக்குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் கடலைப்பருப்பு விவகாரத்தில் அனிதா கொஞ்சம் ஓவராகவே செயல்பட்டார் இது பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அனிதா பிக்பாஸ் வீட்டில் தனித்தன்மையுடன், எந்த குரூப்பிலும் சேராமல், மனதில் தோன்றியதை தைரியமாக கூறும் கேரக்டராக இருந்தார் என்பதும், குறிப்பாக தன்னை ஜெயிலுக்கு அனுப்பியது அநியாயம் என்று போராடியதும், அன்பு குரூப்பை சுக்குநூறாய் உடைத்ததும் அவருடைய பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது. அனிதா வெளியேறிய பிறகு இனிமேல் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.