பொதுமுடக்கத்தில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடத்திய அரங்கிற்கு சீல் வைப்பு.!
தமிழகத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி சென்னையில் நடைபெற்று வந்த பிக்பாஸ் அரங்கிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
By : Thangavelu
தமிழகத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி சென்னையில் நடைபெற்று வந்த பிக்பாஸ் அரங்கிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
சென்னை அருகே உள்ள செம்பரபாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் பங்கேற்ற 6 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாக வந்த தகவலை தொடர்ந்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் மற்றும் வட்டாச்சியர் சங்கர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கில் சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அரங்கிற்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் அரங்கை பூட்டை சீல் வைத்தனர்.
படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவரும் முழுக்கவச உடை அணிவிக்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் தளத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.