பாலாவை கிண்டல் செய்யும் சம்யுக்தா! ஓகே சொல்லிட்டாங்களா? அடுத்த #BiggBossTamil4 காதல்??
பாலாவை கிண்டல் செய்யும் சம்யுக்தா! ஓகே சொல்லிட்டாங்களா? அடுத்த #BiggBossTamil4 காதல்??
By : Kathir Webdesk
இன்று முதல் ப்ரோமோவில் பாலா,அர்ச்சனா இடையே நடந்த மோதலில் பாலா குழந்தை போல் அழுதுவிட்டார். பொதுவாக அடுத்தவரை திட்டியே பழகிய பாலா தற்போது ஒருவர் திட்ட கேட்க அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அழுவதையே முதல் ப்ரோமோ காட்டுகிறது.
அதனை அடுத்து இரண்டாவது ப்ரோமோ வெளியானது.அதில் சிவானியும், பாலாவும் பேசிக்கொள்வது போல ப்ரோமோ இருந்தது.
அதில் பாலா ஷிவானியிடம், ரொம்ப எமோஷனலா முடிஞ்சிடுச்சி அந்த விஷயம் என்று சொல்ல அதற்கு ஷிவானி நீங்க அழுதுருப்பீங்கன்னு தெரியாது என்று கூறுகிறார்.
#Day24 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/esXDODPPgq
— Vijay Television (@vijaytelevision) October 28, 2020
அதற்கு பாலா நம்ம திமிரா பேசுறதுனால எல்லாத்துக்கும் திமிரா தான் பேசுவாங்கன்னு செட் பண்ணிட்டாங்க என்று பாலா பேச, நீங்க நேர்மையா இருக்கீங்க. அத சொல்லுற விதம் திமிரா இருக்கு, அது உங்க ஸ்டைல் என்று கூறுகிறார் ஷிவானி. பின்னர் சம்யுக்தா பாலாவிடம், ஷிவானி ஓகே சொல்லிட்டாளா என்று கேட்க ஷாக்கான பாலா தெளிவா சொல்லுங்கப்பா என்று சிரிக்கிறார் இப்படியாக இரண்டாவது ப்ரோமோ முடிந்தது.
இதை பார்த்து பல ரசிகர்களும் நெட்டிசன்கள் பிக்பாஸில் அடுத்த காதல் காவியம் தொடங்கியுள்ளதால் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.