Kathir News
Begin typing your search above and press return to search.

ருத்ரதாண்டவம் இயக்குநரை நேரில் சென்று வாழ்த்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! காரணம் என்ன ?

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி நடித்துள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் நாடக காதல், போதை கலாச்சாரம் மற்றும் பிசிஆர் சட்டம் உள்ளிட்டவைகள் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

ருத்ரதாண்டவம் இயக்குநரை நேரில் சென்று வாழ்த்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! காரணம் என்ன ?

ThangaveluBy : Thangavelu

  |  28 Sep 2021 6:08 AM GMT

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி நடித்துள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் நாடக காதல், போதை கலாச்சாரம் மற்றும் பிசிஆர் சட்டம் உள்ளிட்டவைகள் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) ருத்ரதாண்டவம் படத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் பாஜக பிரமுகர்கள் இப்ராஹிம், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


இந்நிலையில், ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் என் அலுவலகம் வந்து பார்த்து ரசித்து வாழ்த்திய தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Mohan G

Next Story
கதிர் தொகுப்பு
Trending News