கமலுடன் வாக்குச்சாவடியில் நுழைந்த சுருதிஹாசன் மீது பா.ஜ.க. புகார்.!
தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாஜக புகார் தெரிவித்தது.
By : Thangavelu
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். நேற்றைய வாக்குப்பதிவின் போது கமல் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடைய மகள் சுருதிஹாசனையும் உடன் அழைத்து சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாஜக புகார் தெரிவித்தது.
இது தொடர்பாக கோவை பாஜக மாவட்ட தலைவர் தலைவர் நந்தகுமார், தெற்கு சட்டமன்ற தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் சுருதி ஹாசனுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
சுருதிஹாசன் தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.