சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல் பிடிப்பட்டதா? உண்மை என்ன?
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்வோம் என ஒரு கும்பல் சல்மான்கானுக்கு மிரட்டல் கடிதம் விடுத்திருந்த நிலையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்வோம் என ஒரு கும்பல் சல்மான்கானுக்கு மிரட்டல் கடிதம் விடுத்திருந்த நிலையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானையும், அவரது தந்தை சலீம் கானின் கொள்வோம் என ஒரு கும்பலின் மிரட்டல் கடிதம் கொடுத்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் சிலர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சல்மான்கானை கொள்ள நாங்கள்தான் திட்டமிட்டோம் இதற்காக 4 லட்சம் ரூபாய் கொடுத்து துப்பாக்கியும் வாங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் காவல்துறை வசமிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.