"மதம் மாறினா சாதியை பயன்படுத்த கூடாதுன்னா எவன் மாறுவான்?" - பொட்டில் அடிக்கும் வசனங்களுடன் 'ருத்ர தாண்டவம்' ட்ரைலர்
Breaking News.
By : Mohan Raj
"நாம கும்புடுற சாமிய பிசாசுன்னு சொல்லிட்டு சுத்துறான் பாரு ஒரு கும்பல் அவனை எல்லாம் நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டிலாம்"ன்னு ரொம்பவே அழுத்தமான வசனங்களுடன் வெளியாகியுள்ளது இயக்குனர் மோகன்.ஜி'யின் 'ருத்ர தாண்டவம்' ட்ரைலர்.
நாடகக் காதலை அம்பலப்படுத்திய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, தம்பி ராமையா என பலர் நடித்துள்ள படம் 'ருத்ர தாண்டவம்' இப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தின் ட்ரைலர் படி 'ருத்ர பிரபாகரன்' எனும் நேர்மையான காவல்துறை அதிகாரி சாதிய வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்படுவது போன்ற கதைக்களத்தில் இயக்குனர் மோகன்.ஜி ஒரு அழுத்தமான ஆனால் யாரும் எடுக்க தயங்கும் கதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
வசனங்கள் ரொம்பவே கூர்மையாக உள்ளன, "உன்னை அங்கேயே கொளுத்தி போட்டு வீரவணக்கம் கூட்டம் நடத்திடுவேன்", "சாதி வெறியன்'ன்னு உன்னை ஊரே முத்திரை குத்தி வச்சுருக்கு", "கிருஸ்துவ மதம் மாறிய ஒருத்தருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி பி.சி.ஆர் சட்டம் செல்லாது", "மதம் மாறிட்டா சாதிய பயன்படுத்தகூடாதுன்னு விழிப்புணர்வு வந்துட்டா எவன் மாறுவான்" என்பது போன்ற கூரிய வசனங்கள் படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்க வைக்கின்றன. இணையத்தில் தற்பொழுது பேசும் பொருளாக 'ருத்ர தாண்டவம்' வலம் வருகிறது.