Kathir News
Begin typing your search above and press return to search.

கேப்டன் மகனின் புதிய படம்- வெற்றிவாகை சூடுவாரா கேப்டன் மகன்?

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

கேப்டன் மகனின் புதிய படம்- வெற்றிவாகை சூடுவாரா கேப்டன் மகன்?

KarthigaBy : Karthiga

  |  28 July 2023 5:30 PM GMT

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கஸ்தூரிராஜா, எம்.எஸ்.பாஸ்கர் ,யாமினி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அன்பு டைரக்டர் செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை .காட்டில் வாழும் இளைஞனுக்கும் அங்குள்ள யானைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை மையமாக வைத்து அதிரடி படமாக தயாராகிறது.


கேரளா காடுகளில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தாய்லாந்து ஒடிசா கடுகளிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். காட்டு யானைகளின் வாழ்வியல் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை படத்தில் பதிவு செய்யப்படுகிறது .ஒளிப்பதிவு எஸ்.ஆர்.சதீஷ்குமார். இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன

Next Story
கதிர் தொகுப்பு
Trending News