Kathir News
Begin typing your search above and press return to search.

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்.!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்.!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்.!
X

Amritha JBy : Amritha J

  |  10 Dec 2020 10:32 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா சொகுசு அறையில் இருந்து படப்பிடிப்புக்கு சென்ற பின்னர், அவர் மீண்டும் படப்பிடிப்பில் இருந்து அறைக்கு வந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சியில் சித்ராவை பார்க்க அவருடைய கணவர் ஹேமந்த் மட்டுமின்றி வேறு யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சித்ராவை ஹேமந்த் மட்டும்தான் பார்க்க வந்தாரா அல்லது படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் யாராவது வந்தார்களா வேறு வெளியாட்கள் யாராவது வந்தார்களா என்பது குறித்து இந்த சிசிடிவி காட்சியின் முழுமையான ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ரா தற்கொலை வழக்கில் இதுவரை எந்தவித ஆதாரங்களும் சிக்காத நிலையில் இந்த சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்கி, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தடயவியல் அறிக்கையும் வந்துள்ளதாகவும் அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News