Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன்-2 படத்திலிருந்து விலகிய பிரபலம்! யார் தெரியுமா?

இந்தியன்-2 படத்திலிருந்து விலகிய பிரபலம்! யார் தெரியுமா?

இந்தியன்-2 படத்திலிருந்து விலகிய பிரபலம்! யார் தெரியுமா?
X

Amritha JBy : Amritha J

  |  10 Feb 2021 7:05 AM GMT

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தியன்-2. இப்படத்தினை பிரபல இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இதன் படப்பிடிப்பு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் தமிழக அரசு அனுமதி தந்தும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தினவேல் விலக இருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளன. இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும் என்று தெரியாத நிலையில், அவர் அடுத்த படத்தில் கமிட் ஆக முடியவில்லை என்றும், அதனால் இந்த படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன்-2 படத்திற்கு இவர் இரண்டாவது ஒளிப்பதிவாளர் என்றும், இவரும் விலகி விட்டால் யாரு தான் ஒளிப்பதிவாளர் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் கமலஹாசன் நாயகியாக காஜல், ரகுல் ப்ரீத்சிங் என முக்கிய கதாபாத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News