தர்ஷனுக்கு எதிராக சனம் ஷெட்டியின் வழக்கில் சென்னை ஹைகோர்ட்டின் வலுவான உத்தரவு.!
தர்ஷனுக்கு எதிராக சனம் ஷெட்டியின் வழக்கில் சென்னை ஹைகோர்ட்டின் வலுவான உத்தரவு.!

பிக்பாஸ் சீசன்-3 என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக அறிமுகமானவர் தர்ஷன் தியாகராஜன். இலங்கையைச் சேர்ந்த மாடல், நடிகராக மாறினார், அவர் சில தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது, பிக்பாஸ்-4 போட்டியாளர் ஆன சனம் ஷெட்டி சமூக வலைத்தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தர்ஷனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.
ஏற்கனவே தர்ஷன் மற்றும் சனம் செட்டி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இச்செய்தியை பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பகிரப்பட்டது. ஆனால் பிக்பாஸ்-3 முடிவுக்கு பிறகு, தர்ஷன் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்ததை ஏற்றுக்கொண்ட போதிலும், சனத்தை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.மேலும் சனம், தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த வழக்குகளில் தர்ஷனுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனினும் இந்த மனு நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 3 பிரிவுகளில் தர்ஷனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதைப்பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.