Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க.விற்கு களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனிடையே தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க.விற்கு களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2021 12:21 PM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனிடையே தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம், சிதம்பரம் சிதம்பரத்தில் விஜய் ரசிகர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இது பற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் பறக்கும் படை அங்கிருந்து கிளம்பியது.




இந்தக் கூட்டத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.





இதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் விஜய் அதிமுகவை ஆதரிப்பதற்காக மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளாரோ என்று பேசிக்கொள்கின்றனர். கொரோனா காலத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அப்போது திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இதற்கு நன்றி கடனாக விஜய் அதிமுகவிற்கு உதவலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News