Kathir News
Begin typing your search above and press return to search.

சித்ரா தற்கொலை.. இந்த 2 பேர்தான் டார்ச்சர் கொடுத்தனர்.. போலீசார் திடுக்கிடும் தகவல்.!

சித்ரா தற்கொலை.. இந்த 2 பேர்தான் டார்ச்சர் கொடுத்தனர்.. போலீசார் திடுக்கிடும் தகவல்.!

சித்ரா தற்கொலை.. இந்த 2 பேர்தான் டார்ச்சர் கொடுத்தனர்.. போலீசார் திடுக்கிடும் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2020 4:52 PM IST

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேமந்த் ரவி மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த புதன்கிழமை (9ம் தேதி) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேமந்துடன் தங்கியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு இரவு 2.30 மணி அளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணி சுமார் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேமந்த், சித்ரா இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் அனைவரும் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்துவது என பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத்திற்காக தேதியும் குறித்துள்ளனர். இந்நிலையில், சித்ரா திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவர் மரணம் பற்றி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுதுது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து நேற்று உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றே தகனமும் செய்யப்பட்டது.

இவரது மரணத்தால் பாண்டியன் ஸ்டோர் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி, சித்ராவுக்கு என்று ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்கள் அனைவரும் தங்களது சோகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றதை காண முடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News