பிக்பாஸில் சுரேஷ் - ரியோ இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்.!
பிக்பாஸில் சுரேஷ் - ரியோ இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்.!
By : Kathir Webdesk
பிக்பாஸ் சீசன் 4 இன்றைய ப்ரோமோ வெளியானது. அதில் சுரேஷ்-ரியோ ஆகிய இருவருக்கும் மோதல் ஏற்படுவது போல் ப்ரோமோ அமைந்தது. அதில் 15வது நாளான இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் , ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் எலிமினேஷன் தேர்வில் ஈடுபடுகின்றனர்.
அதில் அர்ச்சனா, சுரேஷ், ரம்யா, ஷிவானி, சோம் சேகர் போன்றோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் ஆரி, ரியோ, ரம்யா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் சுரேஷை நாமினேட் செய்கின்றனர். இந்நிலையில் அடுத்த இரண்டாவது புரோமோவில் டெய்லி டாஸ்க் "சொல்றியா இல்ல செய்றியா" என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. அப்போது சுரேஷ்க்கும்-ரியோவுக்கும் கடும் பேச்சுவார்த்தை தொடங்கின.
அதில் சுரேஷ், "நான் ஏதாவது தப்பு பண்ணா மேலே இருக்குறவர் சொல்லிருப்பான்ல" என்று சொல்ல அதற்கு ரியோ மேலே இருக்குறவருக்கு வேற வேலை இல்லையா சார் நீங்க எதையாவது இழுத்து விடுவீங்க. அவர் வந்துட்டு இருப்பாரா என்று கேட்பது போல அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.
இந்தப் ப்ரோமோவை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் இன்று நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.