Kathir News
Begin typing your search above and press return to search.

'புத்தம் புது காலை' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை விமர்சித்த பிரபலம்.!

'புத்தம் புது காலை' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை விமர்சித்த பிரபலம்.!

புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை விமர்சித்த பிரபலம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2020 8:36 PM IST

சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நட்டி. பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான இவர் அமேசான் பிரைம்ல் வெளியான 'புத்தம் புது காலை' என்ற தொடரை விமர்சித்துள்ளார்.

OTT-யில் வெளியாகும் படங்களில் சில பென்குயின், பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் மிக மோசமாக இருந்ததாகவும் மக்களுக்கு மன உளைச்சலை தந்ததாகவும் கூறப்படுகிறது. அதை போக்கும் விதமாக இப்போது அமேசான் பிரைம் புத்தம் புது காலை என்ற படத்தை ரிலீஸ் செய்து ஆறுதல் அடைந்துள்ளது.







இந்த வெப்சீரிஸ் கதை:

கொரோனா காரணமாக எத்தனையோ உயிர்கள் பலியான நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டதை மையப்படுத்தி இருப்பதாக இந்த படம் முழுவதும் அமைந்திருக்கும். இதில் கார்த்திக் சுப்பராஜின் மிராக்கிள் மட்டும் விதிவிலக்கு போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் இந்த படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை வைத்துள்ளார். டிவிட்டரில் 'புத்தம் புதுக் காலை'ஆகக் கொடுமை.

..வாழ்த்துகள்...தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பேனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பேனிஷ் தெரியுமே. ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். தயவு செய்து ஒரு தலைமுறையைக் கொல்லாதீர்கள்.இடம் கொடுங்கள் இடம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இதை பார்த்து பல நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News