பிக்பாஸில் மோதிக்கொள்ளும் சுரேஷ் மற்றும் பாலா - நடந்தது என்ன.!
பிக்பாஸில் மோதிக்கொள்ளும் சுரேஷ் மற்றும் பாலா - நடந்தது என்ன.!
By : Kathir Webdesk
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோ வெளியானது. அதில் அனைவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தலைப்பில் சொர்க்கபுரி ராஜ குடும்பத்திற்கும், மாயபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே நடக்கும் கடும்போட்டி.
அந்த ப்ரோமோவில் பல பிரச்சினைகள், சண்டைகள் என பல இடம்பெற்றிருந்தன.அதில் சிலையாக இருக்கும் ரியோவை சிரிக்க வைக்க முயற்சிப்பது என அரக்க குடும்பம் அட்டூழியம் செய்கிறது. அப்போது சுரேஷுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.
மாயபுரி அரக்க குடும்பத்தில் சுரேஷ், ஷிவானி, அனிதா, ஆரி, ஆஜித், அர்ச்சனா, கேபிரில்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் சொர்க்கபுரி அரச குடும்பத்தில் ராஜாவாக வேல்முருகன், ராஜமாதாவாக நிஷா மற்றும் சனம், ரம்யா, சம்யுக்தா, பாலா, ரியோ, சோம் சேகர் உள்ளிட்டோர் உள்ளனர். இதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இன்று நல்ல காட்சிகள் அரங்கேறும் என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர்.