வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹைதராபாத் : பண உதவி செய்த நடிகர்கள்.!
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹைதராபாத் : பண உதவி செய்த நடிகர்கள்.!

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு அதிக அளவு பண உதவி செய்த தெலுங்கு நடிகர்கள். அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் மிகக் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கின்றனர்.இதற்காக முன்வந்து உதவ வேண்டும் என முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கோரிக்கை வைத்திருந்தார்.முதல்வர் நிவாரண நிதிக்குப் பணமளிக்க அவர் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தலா ரூ.50 லட்சமும், நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும்,
சிரஞ்சீவி, நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் ரூ.1 கோடியும் முதல்வர் நிதி உதவிக்கு கொடுத்துள்ளனர். இதை அறிந்த தெலுங்கு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.