நடிகர் சந்தானம் மீது வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள்!
நடிகர் சந்தானம் மீது வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து முடித்துள்ள படம் டிக்கிலோனா. இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்தது.ஆனால் தற்போது டிக்கிலோனா படத்துக்கு டப்பிங் செய்ய மாட்டேன் என கூறுகிறாராம்.
இதற்கான காரணம்: ஏற்கனவே நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ள படம் சர்வர் சுந்தரம் மற்றும் பிஸ்கட் ஆகிய படங்கள் OTT-யில் வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்படத்தை முடித்து கொடுத்துவிட்டால் OTT-யில் வெளியிடுவார்கள் என அஞ்சுகிறார் என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றனர். இதனால் அவருடைய ரசிகர்கள் படத்தில் மூன்று வேடங்களில் இருப்பதை பார்க்க ஆர்வமுடன் இருந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என வருத்தத்தில் இருக்கின்றனர்.