தல அஜித்தின் வலிமை படத்தின் நியூ அப்டேட்.!
தல அஜித்தின் வலிமை படத்தின் நியூ அப்டேட்.!

'நேர்கொண்ட பார்வை' போனி கபூர் இயக்கத்தில்,இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்டதால் அடுத்த படமும் போனிகபூர் அஜித்தை வைத்து எடுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த படம்தான் *வலிமை*. இந்தப் படத்திலும் வினோத் தான் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தின் சூட்டிங் கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது சூட்டிங் தமிழக அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து சென்னை புறநகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.இங்கு பல முக்கிய காட்சிகளும் சில, சண்டைக்காட்சிகளும் இடம் பெறும் என்று தெரியவந்துள்ளது.அஜித் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் சூட்டிங் விரைவில் படமாக்கப்பட்டு தியேட்டரில் வெளிவரும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இதை அறிந்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் வலிமை படத்தை இந்தியில் 'பான் இந்தியா' என்று இந்தியில் ரீமேக் செய்கிறார் போனிகபூர்.