நடிகை நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
நடிகை நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
By : Kathir Webdesk
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரவுடிதான்' திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அதில் நயன்தாராவின் தலையில் இருந்து ரத்தம் வருவது போல உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தினை இயக்குனர் 'மிலிந்த் ராவ்' கொரியன் திரைப்படமான 'பிளைண்ட்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்யை நெற்றிக்கண் என்ற பெயரில் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை:விபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் தனது பார்வையை இழக்கின்றார் என்பதும் இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பது முழுக்க முழுக்க இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ஒரு பட தொகுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாரா போலவே இல்லை எனவும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.