நில மோசடி வழக்கில் சூரியன் காவல்துறை விசாரணை.!
நில மோசடி வழக்கில் சூரியன் காவல்துறை விசாரணை.!
By : Kathir Webdesk
தமிழ் சினிமாவில் நடிகர் "சூரி" முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர். இவர் படங்கள் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக "2 கோடியே 70 லட்சம்" ரூபாய் மோசடி செய்ததாகவும், "வீர தீர சூரன்" படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ.40 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் "அன்புவேல் ராஜன்" மற்றும் "விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ்" மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
சூரி இப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவையும் பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் நடிகர் சூரியிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜராக கூறி சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூரி பணத்தை கேட்க "தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்" அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்புகார் தொடர்பாக இன்று நடிகர் சூரியிடம் அடையார் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக விசாரணை மேற்கொண்டதாக தகவல்வெளியாகியுள்ளது.