தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா.?
தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா.?
By : Kathir Webdesk
தளபதி விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த படம் தளபதி 65. சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க இருந்தார். ஆனால் தற்போது படத்திலிருந்து நீங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே சர்க்கார், கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். இப்படங்கள் ரசிகர்களால் கவரப்பட்டு அதிக நாட்கள் திரையில் ஓடி அதிக வசூலை பெற்றுத் தந்தன. ஆனால் தற்போது ஏன் விலகி இருக்கிறார் என்ற காரணம்: முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும், பட்ஜெட் தொடர்பாக விஜய்க்கும், முருகதாஸுக்கும், சன் பிக்சர்ஸ்க்கும் ஏற்பட்ட கருத்து மோதல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். இனி வரும் காலங்களில் இது போன்ற கூட்டணி அமையுமா என்றும் பார்க்கலாம்.