சிம்புவிற்கு தங்கையாக எதிர்நீச்சல் நடிகை: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
சிம்புவிற்கு தங்கையாக எதிர்நீச்சல் நடிகை: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
By : Kathir Webdesk
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட இவரை SilambarasanTR46 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
அதனிடையே தற்போது சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் படத்தில் திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியாக தோற்றமளிக்கிறாராம். இது கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார்.
படத்தில் சிம்புவிற்கு தங்கையாக எதிர்நீச்சல், அட்டகத்தி, உள்குத்து, புலி போன்ற படங்களில் நடித்த நந்திதா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சூட்டிங் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதினால் படத்தினை பொங்கலுக்கு வெளியிடலாம் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இதை அறிந்த ரசிகர்கள் சிம்புவின் தங்கையாக இவரா என்ற எதிர்பார்ப்பிலும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.