கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படத்தின் டிரைலர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படத்தின் டிரைலர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் படம் OTT- மூலம் திரையில் வந்தது. பென்குயின் படம் அதிக அளவில் ரசிகர்களால் கவரப்படவில்லை.
தற்போது 'மிஸ் இந்தியா' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களால் மிகவும் கவர்ந்து வருகிறது. இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் திரையில் வந்து அதிக வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கதை:
பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. நடிகையர் திலகத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்ணியம் அமைந்த திரைப்படம். இப்படத்தில் அதிக உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்தை கொண்டவராக இருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக விருதினை பெறுவார் என்று கமெண்ட்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.