ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தின் ரீமேக்கில் பாகுபலி நடிகர் : உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தின் ரீமேக்கில் பாகுபலி நடிகர் : உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மலையாளத்தில் 'ஐயப்பனும் கோஷியும்' என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்த படம் என்று கூறலாம். அதனால் இப்படத்தை தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் எடுக்க முன்வந்துள்ளனர். அந்தவகையில் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பது நடிகர் கார்த்திக் மற்றும் பார்த்திபன் என்ற செய்தி முன்னதாக வந்தது.
இந்நிலையில் அப்படத்தில் அவர்கள் நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக பாகுபலி என்ற பிரமாண்ட படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதி இக்கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இச்செய்தியை கேட்டு தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். கிஷோர் என்பவர் ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.