சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் சூர்யா.இவர் நடித்த படங்களின் மூலம் அதிக ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு,நடிகை அபர்ணா பாலமுரளி,ஜாக்கி ஷெராப் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் வெளியீடு திடிரென தள்ளிப்போனது.இந்நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 12ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
இந்த செய்தியை நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அமேசான் ப்ரைமில் படம் வெளியாகும் நிலையில் சூரரைப்போற்று டிரைலர் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அறிந்த சூரியாவின் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் நாட்களை எண்ணி வருகின்றனர்.