Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா - தள்ளிப் போகும் 'வாடிவாசல்'?

சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா - தள்ளிப் போகும் 'வாடிவாசல்'?

சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா - தள்ளிப் போகும் வாடிவாசல்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2020 6:13 PM GMT

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சில காலங்களாக படங்கள் நடிக்காமல் தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படம் பல பிரச்சினைகளுக்கு பின்பு தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்பு படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இயக்க உள்ளாராம். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்த படங்களை அடுத்து ஞானவேல்ராஜா இயக்கத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்திற்கு குறைந்தது 400, 500 நபர்கள் ஆவது படத்திற்கு வேலை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் படப்பிடிப்பை கொரோனா முடிந்தபின்பு ஆரம்பிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News