நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?
By : Kathir Webdesk
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர் மனதில் அதிக இடங்களை பிடித்தும், பல விருதுகளையும் வென்று குவித்தவர்.
தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் வேதாளம். ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட திரைப்படம் இது ஒரு அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த திரைப்படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன்,சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.தற்போது இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இதில் தெலுங்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் பென்குயின் இந்த படம் அவருக்கு அதிக வரவேற்பை பெறவில்லை என்றாலும் இப்படத்தில் அனைவரையும் கவர்ந்து விடுவாரா என்று பார்ப்போம்.