பிக்பாஸில் போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி: காரணம் என்ன.?
பிக்பாஸில் போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி: காரணம் என்ன.?

பிக்பாஸ் சீசன்-4 எப்பொழுது ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஒரே பிரச்சனையாக தான் உள்ளது. அந்த வகையில் டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் ஒவ்வொரு போட்டியின் போது ஒரு போட்டியாளர் மற்றொருவருடன் முட்டிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 'ஆரி' மற்றும் 'அனிதா' சம்பத்தை மோசமாக பர்மாமேன்ஷ் செய்ததாக மற்ற ஹவுஸ்மேட்கள் சேர்ந்து தேர்வு செய்கின்றனர்.
இதைப் பொறுக்க முடியாமல் ஆரி இந்த வீட்டிற்குள் குரூப்பிஸம் இருக்க கூடாது என்று தான் எல்லாரும் முயற்சி செய்கிறோம். ஆனால் திரும்ப திரும்ப "குரூப்பிஸம்" ஃபேவரிசம் நடக்கிறது. இதனால்தான் நானும் அனிதாவும் இந்த இடத்தில் நிற்கிறோம். யார் என்ன பேசுகிறீர்கள். யார் யாருக்கு ஃபேவராக இருக்கிறீர்கள் என என்னால் நெத்தியில அடிச்ச மாதிரி சொல்ல முடியும்" என ஆரி கொந்தளிக்க மற்ற ஹவுஸ்மேட்ஸ் இப்பவே சொல்லுங்களேன் என கோபமாக கேட்கின்றனர்.
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பிக்பாஸ் சீசன்-4 இல் குரூப்பிஸம் என்ற வார்த்தை அதிகமாக வருகிறது. இதனால் பல பிரச்சினைகளும் நிலவி தான் வருகின்றன அந்த வகையில் ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். தற்போது ஆரி கொந்தளித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இன்று பல பிரச்சினைகள் வருமென்று கூறிவருகின்றனர்.