Kathir News
Begin typing your search above and press return to search.

ராகவா லாரன்ஸ் இயக்கிய லக்ஷ்மி பாம் திரைப்படத்தின் பெயர் மாற்றம் - பரபர பின்னணி.!

ராகவா லாரன்ஸ் இயக்கிய லக்ஷ்மி பாம் திரைப்படத்தின் பெயர் மாற்றம் - பரபர பின்னணி.!

ராகவா லாரன்ஸ் இயக்கிய லக்ஷ்மி பாம் திரைப்படத்தின் பெயர் மாற்றம் - பரபர பின்னணி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 4:24 PM GMT

அக்‌ஷய் குமார் நடித்துள்ள "லக்ஷ்மிபாம்" என்ற திரைப்படத்தின் பெயரை "லக்ஷ்மி" என்று மாற்றம் செய்துள்ளனர். இந்த படத்தின் பெயர் லக்ஷ்மி தேவி மீது அவமரியாதை காட்டுவதாகவும், இந்துமக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி 'கர்ணி சேனா' என்ற இந்து அமைப்பு படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


இந்த எதிர்ப்பினை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று தணிக்கை வாரியத்துடன் கலந்துரையாடிய பின்னர் படத்தின் தலைப்பை 'லக்ஷ்மி' என்று மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 'ராகவா லாரன்ஸ்' நடித்து இயக்கி படம் "காஞ்சனா" இந்த படம் ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வகையில் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழி மாற்று செய்யப்பட்டது.

தமிழில் இப்படத்தில் கதாநாயகனாக 'ராகவா லாரன்ஸ்' நடித்திருப்பார் மேலும் 'சரத்குமார்' திருநங்கை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் காட்சிகள் பார்ப்போரை ரசிக்கவும், யோசிக்கவும் செய்தது.மேலும் ராகவா லாரன்ஸ் திருநங்கையாக வேடமிட்டு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் "அக்ஷய் குமார்" 'சரத்குமார்' நடித்த 'திருநங்கை' கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஹிந்தியில் "லக்ஷ்மி பாம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம்,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை திரையரங்குகள் திறக்கப்படாததால் இப்படம் OTT-யில் ரிலீஸாகவுள்ளது.அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்தளத்தில் "நவம்பர் 9ம்" தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News