பிக்பாஸ் வீட்டில் வெளியாகப் போகும் நபர் யார் தெரியுமா.? அதிகாரப்பூர்வ தகவல்.!
பிக்பாஸ் வீட்டில் வெளியாகப் போகும் நபர் யார் தெரியுமா.? அதிகாரப்பூர்வ தகவல்.!

தமிழில் பிக்பாஸ் சீசன்-4 தொடங்கிய நாள் முதல் பல்வேறு வாக்குவாதங்கள் பிரச்சினைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல இருந்த ஆஜித் தன்னுடைய எவிக்ஷன் ஃப்ரீ பாசை வைத்து தப்பித்து விட்டார்.ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியே செல்வது உறுதி. அதிலும் இந்த முறை, அதிகபட்சமாக 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதால் யார் வெளியேறுவார் என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
ஆனால் தற்போது மக்கள் குறைவான வாக்குகள் அளித்திருப்பது வேல்முருகனுக்கே ஆதலால் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுக்காமல், எந்த ஒரு விஷயத்திற்கும் பம்மிக்கொண்டே இருப்பதால் இவருக்கு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஓரிரு தினத்திற்கு முன்,பாலா தூங்கிய பிரச்சனை வந்த போது கூட ஒரு அணியின் கேப்டனாக இருந்தும்... அவர் பாலா கூறிய விஷயத்தை அனைவர் மத்தியிலும் ஒளித்து மறைத்து தான் வெளிப்படுத்தினார். அசதியில் தூங்கியவரை வேலை வாங்கியதற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.