நடிகை காஜல் அகர்வாலின் இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள் இதோ.!
நடிகை காஜல் அகர்வாலின் இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள் இதோ.!

தமிழ் சினிமாவில் நடிகர் 'பரத்துடன்' இணைந்து 'பழனி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை "காஜல் அகர்வால்". இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் என்பதும், தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இவருக்கு தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் "காஜல் அகர்வாலுக்கு" மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் "கவுதம் கிச்லு" என்பவருடன் அக்டோபர் 30-ம் தேதி நேற்று திருமணம் நடைபெற்றது.மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இத்திருமணத்தில் இரு வீட்டாரை சேர்ந்த 25 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.அதனை அடுத்து அவருடைய சில திருமண புகைப்படங்கள் மட்டுமே வெளியானதையடுத்து திருமண சடங்குகள் குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இவருடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.