ஐபிஎல் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய தொகுப்பாளினி - காரணம் என்ன.?
ஐபிஎல் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய தொகுப்பாளினி - காரணம் என்ன.?
By : Kathir Webdesk
பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கான தொகுத்து வழங்கும் பணியிலிருந்து திடீரென விலகியுள்ளார் பாவனா. இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏற்கனவே தொகுப்பாளராக பணியாற்றியவர்.ஜோடி நம்பர் ஒன்,சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார், பாவனா.கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பாவனா பாலகிருஷ்ணன் விலகியுள்ளார். இதுதொடர்பாக பாவனா, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் என் பெற்றோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று, மீண்டும் நான் திரும்பி வருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும், பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றன.