பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக நுழைந்த பாடகி.!
பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக நுழைந்த பாடகி.!
By : Kathir Webdesk
பிக்பாஸ் சீசன்-4 எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல பிரச்சினைகள், சண்டைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 28-வது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியே செல்லும் நிலையில், மற்றொரு போட்டியாளர் உள்ளே நுழைய உள்ளார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வயில்டு கார்டு என்டீறியாக பாடகி சுசித்ரா களமிறங்கி இறங்கிருக்கிறார். இவர் சுசி லீக்ஸ் சர்ச்சை மூலம், கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்த பாடகி "சுசித்ர"'. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக சமூகவலைத்தளங்களில் பரவின. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வந்த ப்ரோமோவில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் சுசித்ரா.
மேலும் வெளியாகியுள்ள புரோமோவில் கமலிடம் பேசும்போது கூறும்போது: ஒவ்வொரு சீசனை விட இந்த தடவை போட்டி ரொம்ப கடுமையாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் சுசித்ரா. சுசித்ராவின் வருகையை சிலர் மகிழ்ச்சியுடன் சிலர் வரவேற்றாலும், சிலரது முகத்தில் இப்போதே அச்சம் ஒட்டிக்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. அதனை அடுத்து இன்று வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.