திருமணத்திற்கு பிறகு சிரஞ்சீவி படத்திற்கு உடனே கால்ஷீட் கொடுத்த காஜல் அகர்வால்.!
திருமணத்திற்கு பிறகு சிரஞ்சீவி படத்திற்கு உடனே கால்ஷீட் கொடுத்த காஜல் அகர்வால்.!

நடிகை காஜல் அகர்வால் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில் இவர் அக்டோபர் 30-ஆம் தேதி தொழில் அதிபர் கவுதம்மை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் இவரது திருமணத்திற்கு ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கமலஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும், சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா'' ஆகிய படங்களில் காஜல் அகர்வால் இப்போது நடித்து வருகிறார். இவற்றில் கொரோனா காரணமாக 'ஆச்சார்யா' படத்தின் ஷுட்டிங்,பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆச்சார்யா ஷுட்டிங்கை மீண்டும் நடத்த சிரஞ்சீவி முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்து 2 நாட்களே ஆன நிலையில் இவர் 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறாரார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.