மாஸ்டர் பட கதாநாயகி நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்.!
மாஸ்டர் பட கதாநாயகி நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்.!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'மாஸ்டர்' ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா தியேட்டர் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதனை அடுத்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருப்பார்.
இவர் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் அவரின் 43 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதும் ஏற்கனவே அறிந்ததே.
இந்நிலையில் இந்தப் படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அறிவித்துள்ளது. அதில் நடிகை மாளவிகா மோகனன், D43 படத்தில் நடிக்கவுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மாளவிகா மோகன் டிவிட்டரில் உங்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கவுரவம் என்றும் இத்தனை வருடங்களாக நீங்கள் தயாரித்துள்ள படங்கள் அற்புதமானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.