நடிகர் சூர்யாவின் அடுத்த படங்களின் பட்டியல் இதோ.!
நடிகர் சூர்யாவின் அடுத்த படங்களின் பட்டியல் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. தற்போது பல படங்களில் நடித்து அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றனர். அந்த நிலைகள் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்து தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்பு நவம்பர் 12-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்தது நடிகர் சூர்யா ட்விட்டரில் அறிவித்துள்ள அடுத்த படத்தின் அப்டேட்கள்:
சூர்யா, முதலாவதாக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'நவரசா' என்கிற ஆந்தாலஜி படத்திலும், அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் இயக்கும் படத்தை வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்து ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.