சூப்பர் ஹிட்டான மலையாள படத்தினை தமிழ் ரீமேக் செய்யும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.!
சூப்பர் ஹிட்டான மலையாள படத்தினை தமிழ் ரீமேக் செய்யும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.!
By : Kathir Webdesk
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். இவர் தற்போது மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன "ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்" தமிழில் படத்தை, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சோபின் சௌஹிர் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 'வெர்ஷன் 5.25' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படத்திற்கு கேரள அரசு மாநில திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை அளித்துள்ளது. இப்படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சராமுடு சிறந்த நடிகருக்கான மாநில விருதை வென்றார்.இந்நிலையில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாகவும்,அதை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் "லிங்கா" படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மீண்டும் மலையாள படத்தை ரீமேக் செய்வதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.