பரியேறும் பெருமாள் பட நடிகருக்கு கலெக்டர் செய்த உதவி: குவியும் வாழ்த்துக்கள்..!
பரியேறும் பெருமாள் பட நடிகருக்கு கலெக்டர் செய்த உதவி: குவியும் வாழ்த்துக்கள்..!
By : Amritha J
தமிழ் சினிமாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சர்வதேச விருதுகளையும் வென்றது.
இந்தநிலையில் இந்த படத்தின் கதாநாயகன் கதிருக்கு தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. அந்தவகையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவரது வீட்டை இழந்து தவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இதைப் பார்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உதவி செய்து உள்ளார்.
அதன்படி தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் சொந்த வீடு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணியையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஆணையை தங்கராசு தனது குடும்பத்துடன் சென்று வாங்கியுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.