கூத்தாடி என்று கூறிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர் விவேக்!
கூத்தாடி என்று கூறிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர் விவேக்!

சினிமா நடிகர்களை கூத்தாடி என்று கூறிய நெட்டிசனுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த விவேக். தமிழ் சினிமாவில் கருத்துக்கள் நிறைந்த காமெடியாக கூறி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விவேக்.அந்த வகையில் மாணவர்களுக்காக விவேகானந்தர் கூறிய ஒரு கருத்தை அவர் அவரது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒரு நெட்டிசன் விவேகானந்தர் கூறியது எல்லாம் படிக்க மாட்டார்கள் நம் மாணவர்கள் என்றும், அஜித்-விஜய் என்றால் மட்டும் படிப்பார்கள் என்று கூறினார். இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த ஒரு நெட்டிசன், "ஆமாம் கூத்தாடிகள் மக்களை இப்படி ஆக்கி வெச்சிருக்க என்ன விவேக்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கமெண்டை பார்த்த விவேக் ட்விட்டரில் கூறியவை: கூத்தாடிய profile dp-யா வச்சிருக்கீங்க? கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே! என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க?😂 கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 https://t.co/B0R1qg4WOY
— Vivekh actor (@Actor_Vivek) January 29, 2021