Begin typing your search above and press return to search.
முன்னணி குணச்சித்திர நடிகர் செல்லதுரை மாரடைப்பால் மரணம்.!
தமிழ் முன்னணி நடிகர்ளுடன் இவர் பல்வேறு படங்களை நடித்துள்ளார். விஜய் படமான தெறி, கத்தி, தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

By : Thangavelu
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர் செல்லதுரை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் நடிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முன்னணி நடிகர்ளுடன் இவர் பல்வேறு படங்களை நடித்துள்ளார். விஜய் படமான தெறி, கத்தி, தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
செல்லத்துரை ஐயா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 84 வயதாகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டுக் கழிப்பறையில் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்டு குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருவால் அத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
