தனது பெயரில் அவதூறு.. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்.!
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் செந்தில், இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அமமுகவுக்கு சென்றார்.
By : Thangavelu
தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கி அதில் சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் செந்தில், இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அமமுகவுக்கு சென்றார்.
இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலின்போது நடிகர் செந்தில் பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனிடையே மதுபானக் கடை திறப்புக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் செந்தில் தமிழக அரசை கண்டிப்பது போன்ற பதிவுகள் ட்விட்டரில் உலா வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் செந்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை தொடங்கி அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சார்லியின் பெயரிலும் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கியதாக அவரே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.