தளபதி பட இயக்குனருடன் இணையும் பிரபல நடிகரின் மகன் மற்றும் பார்த்திபன்.!
தளபதி பட இயக்குனருடன் இணையும் பிரபல நடிகரின் மகன் மற்றும் பார்த்திபன்.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த 'துள்ளாத மனமும் துள்ளும்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் எழில். அதன்பிறகு விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தையும் இயக்கியவர் ஆவார்.
இந்நிலையில் இயக்குனர் எழில், பிரபல க்ரைம் எழுத்தாளரான ராஜேஷின் நாவல் கதையான கொலை சம்பவத்தை மையப்படுத்தி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அப்படத்தில் முன்னணி நடிகரான பார்த்திபன் மற்றும் 90களின் மிகவும் பிரபலமான கார்த்திக் அவரின் மகன் கௌதம் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பார்த்திபன் போலீஸ் கேரக்டரிலும்,கௌதம் தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரியும் கேரக்டரிலும் நடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இப்படம் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.
மேலும் சாய்பிரியா என்ற அறிமுக நடிகை இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க இருக்கிறார்.