Kathir News
Begin typing your search above and press return to search.

தளபதி மாஸ்டர்: OTT-யில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு பேச்சுவார்த்தை.!

தளபதி மாஸ்டர்: OTT-யில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு பேச்சுவார்த்தை.!

தளபதி மாஸ்டர்: OTT-யில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு பேச்சுவார்த்தை.!
X

Amritha JBy : Amritha J

  |  28 Nov 2020 9:33 PM IST

தளபதி விஜய் நடித்து முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் திரையரங்குகளில் தான் திரையிட வேண்டும் என்றும் விஜய் உறுதியாக இருப்பதன் காரணமாக தயாரிப்பாளர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை பல மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தியேட்டரில் 10,15 நபர்கள் மட்டுமே அமர்ந்து படம் பார்த்த நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் தியேட்டர்களில் கூட்டம் வராத காரணத்தினாலும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் OTT-யில் ரிலீஸானது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் OTT நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வராத நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மாஸ்டர்’ திரைப்படத்தை முன்னணி OTT நிறுவனம் ஒன்றில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் படம் OTT-யில் ரிலீஸ் ஆகுமா என்ற தகவல் வெளிவரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News