தளபதி விஜய் ஒரு விஷ வலையில் மாட்டி இருக்கிறார் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் உருக்கமான பேட்டி.!
தளபதி விஜய் ஒரு விஷ வலையில் மாட்டி இருக்கிறார் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் உருக்கமான பேட்டி.!

விஜய்யின் தந்தை தன் மகன் ஒரு விஷயம் வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று பேட்டியின் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக பதிவு செய்யப்பட்டதை அறிந்து, நடிகர் விஜய் தன் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், தன் தந்தையின் கட்சிக்கும், தம் ரசிகர்களின் இயக்கத்துக்கும் தொடர்பில்லை என்பதால் அதில் இணைத்துக்கொண்டு பணிபுரிய வேண்டாம் என்றும், தன் பெயரையோ, புகைப்படத்தையோ அவ்வாறு பயன்படுத்தினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் பிஹைண்ட்வுட்ஸ்க்காக அளித்த பேட்டியில் அவர் கூறியது:விஜய் 1992-ல் நடிகரானார். 1993ல் விஜயை கேட்காமல், ஒரு ரசிகனாக விஜய்க்கு ஒரு அமைப்பு ஆரம்பித்தேன்.நட்சத்திரம் ஆனாலும் விஜய் என் பிள்ளை தான் என்றார்.
விஜய்க்கு இதில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். அன்று ரசிகர் மன்றம் தொடங்கியது போல், விஜய்க்கு நல்லது என நினைத்து நான் கட்சி தொடங்குகிறேன்.விஜயிடம் அரசியல் விஷயங்களை நான் அவ்வளவா பேசியதில்லை.மேலும் அப்பா பண்ணியிருப்பது நல்லதென ஒரு நாள் அவரே ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் எனவும் ரசிகர்களுக்கும் நான் நல்லதுதான் செய்கிறேன் என்பது தெரியும் என்றும்,நான் அரசியல்வாதிகளுடன் பழகியுள்ளேன். ஓரளவுக்கு அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு நாலேஜ் இருக்கிறது என்றார்.
அதன்பிறகு எங்கள் இருவருக்கும் சண்டை இல்லை எனவும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.