Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர்கள் - யார் தெரியுமா!

பிக்பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர்கள் - யார் தெரியுமா!

பிக்பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர்கள் - யார் தெரியுமா!

Amritha JBy : Amritha J

  |  11 Jan 2021 4:00 PM GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 99-வது நாட்கள் நடைபெறும் நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகளும், சண்டைகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் இன்று மீண்டும் எவிக்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சிறப்பு விருந்தாளியாக இன்று வருகை தந்துள்ளனர்.

இதில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை சேர்ந்த மூவர் உள்ளே வந்து இருப்பது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சனம், அனிதா எங்கே என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் நாளை மற்ற போட்டியாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷாவை பார்த்ததும் ரியோ, கேபி, சோம் ஆகியோர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்கள் வந்திருப்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இதைப் பற்றி இன்றைய காண்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News