வலிமை அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்..!
#ValimaiUpdate
By : Amritha J
தல அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் பல மாதங்களாக வராத நிலையில் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் கூட்டத்திலும் கிரிக்கெட் மைதானத்தில் கேட்டு வந்தனர். இதை அறிந்த அஜித் இவ்வாறு செய்வது எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தல அஜித் கூறியும் ரசிகர்கள் பலரிடமும் வலிமை அப்டேட் குறித்து கேட்டு தான் வருகின்றன. அந்த வகையில் வலிமை படத்திற்கு சம்பந்தமே இல்லாத இசையமைப்பாளர் தமன் அவர்களிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவரும் பதில் அளித்து உள்ளார். வலிமை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வரும் இன்னொரு படம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான வக்கீல் சாஹேப். இந்த படத்தின் அப்டேட்டை இசையமப்பாளர் தமன் அவரது டுவிட்டரில் பதிவு செய்த நிலையில் அவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட்டை கேட்டார்.
இதற்கு பதிலளித்த தமன் கூறியது:சமீபத்தில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு கம்போஸ் செய்த ஒரு பாடலை கேட்டேன். மிகவும் சூப்பராக இருந்தது. அஜித்துக்கு மிகவும் பொருத்தமாக இந்த பாடல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I heard my brother darling @thisisysr #kikichified one song for our #thala in #valimai ❤️🎈it will be surely worth a wait for our #thala for sure 📡🎧🎵⏳ https://t.co/xsks7ZDuqE
— thaman S (@MusicThaman) February 17, 2021